-5 %
Out Of Stock
மாய விரோதி
Categories:
Graphic Novel | கிராஃ பிக் நாவல்
₹162
₹170
- Language: தமிழ்
- Publisher: இந்து தமிழ் திசை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குழந்தைகளுக்குக் கடினமான விஷயத்தை எளிதில் புரிய வைக்க சிறந்த வழி சித்திரக் கதைளே. அறிவியல் புனைவு கதைகள், வரலாற்றுக் கதைகள், மாயாஜாலக் கதைகள், துப்பறியும் கதைகள், பொழுதுபோக்குக் கதைகள் எனத் தமிழில் வராத சித்திரக் கதைகளே இல்லை. சித்திரக் கதைப் புத்தகங்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு சென்ற தலைமுறைவரை அத்தனை பிணைப்பாக இருந்தது. ஆனால், சித்திரக் கதைகளின் வருகை இப்போது குறைந்துவிட்டது. குழந்தைகளுக்கு முதல் புத்தகமாகப் பாடப் புத்தகங்களே அறிமுகமாகின்றன. குழந்தைகளிடம் வாசிப்பை வளப்படுத்த வேண்டும் எனில் சித்திரக் கதைகள் அதிகம் வர வேண்டும். அந்த முயற்சியின் தொடக்கப் புள்ளியாக ‘தி இந்து’ குழந்தைகள் இணைப்பிதழலான ‘மாயா பஜார்’ பகுதியில் ‘மாய விரோதி’ என்ற சித்திரக் கதையைத் தொடராக வெளியிட்டது. மனித தலையுடைய வெட்டுக்கிளி உடலைப் பெற்ற சிறுவன், தன் சுய உருவத்தை அடைய ஜிம்பா என்ற விசித்திரமான பாத்திரம், உதவும் கதைதான் இது. ‘மாய விரோதி’யைத் தேடி வெவ்வேறு உலகுக்கு ஜிம்பா செல்லும்போது நிகழும் திருப்பங்களையும் மாயாஜாலங்களையும் இந்தச் சித்திரக் கதை வழியே ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாகச் சொன்னார் இந்தக் கதையின் ஆசிரியர் முத்து. அதற்கு வலு சேர்க்கும் வகையிலான ஓவியங்களுக்கும் கதைக்குள் எல்லோரையும் ஈர்த்தது.
| Book Details | |
| Book Title | மாய விரோதி (Maaya Virothi) |
| Publisher | தமிழ் திசை (THE HINDU Publication) |
| Pages | 0 |